67வது லீக் போட்டியில் கோப்பையை நோக்கி குஜராத் கோட்டையை விட்ட சென்னை: ஐபிஎல்லில் இன்று 2 ஆட்டங்கள்

* ஐபிஎல் போட்டியின் 67வது லீக் ஆட்டம் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு அகமதாபாத்தில் தொடங்குகிறது. தங்களின் கடைசி லீக் ஆட்டமான இதில் குஜராத் டைடன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
* ஐபிஎல் தொடர்களில் இந்த 2 அணிகளும் இதுவரை 7 போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அவற்றில் குஜராத் 4, சென்னை 3 போட்டிகளில் வென்றுள்ளன.
* இந்த ஆட்டங்களில் அதிகபட்சமாக குஜராத் 231, சென்னை 206 ரன் வெளுத்துள்ளன.
* குறைந்தபட்சமாக சென்னை குஜராத் 143, சென்னை 133 ரன்னில் ஆட்டத்தை முடித்துள்ளன.
* குஜராத் இதுவரை விளையாடிய 13 லீக் ஆட்டங்களில் 9 – 4 என்ற கணக்கில் வெற்றி – தோல்விகளை பதிவு செய்துள்ளது.
* அதனால் சுப்மன் கில் தலைமையிலான முன்னாள் சாம்பியன் குஜராத், 18 புள்ளிகளுடன் பிளே ஆப் சுற்றை ஏற்கனவே உறுதி செய்து விட்டது.
* அதே நேரத்தில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை 13 ஆட்டங்களில் ஆடி, 3-10 என்ற கணக்கில் வெற்றி – தோல்விகளை பெற்று, 6 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை உறுதி செய்துள்ளது. அதனால், பிளே ஆப் வாய்ப்பையும் இழந்துள்ளது.
* இன்றைய ஆட்டத்தில் வெல்வதன் மூலம் முதல் 2 இடங்களில் ஒன்றை குஜராத் அணி உறுதி செய்வதுடன் குவாலிபயர் வாய்ப்பையும் பெற முடியும்.

68வது லீக் போட்டியில்அடங்க மறுக்கும் சன்ரைசர்ஸ்: விடா முயற்சியுடன் கொல்கத்தா
* டெல்லியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 68வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
* பிளே ஆப் வாய்ப்பை ஏற்கனவே இழந்து விட்ட இந்த 2 அணிகளுக்கும் இது 14வது மற்றும் கடைசி லீக் ஆட்டமாகும்.
* ஏற்கனவே விளையாடிய தலா 13 லீக் போட்டிகளில் கொல்கத்தா 5-6 என்ற கணக்கிலும், சன்ரைசர்ஸ் 5-7 என்ற கணக்கிலும் வெற்றி – தோல்விகளை அடைந்துள்ளன.
* புள்ளிப்பட்டியலில் கொல்கத்தா 12, சன்ரைசர்ஸ் 11 புள்ளிகளுடன், முறையே 7 மற்றும் 8வது இடங்களில் உள்ளன.
* இந்த 2 அணிகளும் இதுவரை, நேருக்கு நேர் சந்தித்த 29 ஆட்டங்களில் கொல்கத்தா 20 – 9 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.
* இந்த ஆட்டங்களில் அதிகபட்சமாக சன்ரைசர்ஸ் 228, கொல்கத்தா 208 ரன் விளாசியுள்ளன.
* குறைந்தபட்சமாக சன்ரைசர்ஸ் 113, கொல்கத்தா 101 ரன் எடுத்துள்ளன.
* மற்ற அணிகளுடன் இந்த அணிகள் கடைசியாக மோதிய தலா 5 ஆட்டங்களில் கொல்கத்தா 2-1 (2 ஆட்டங்கள் ரத்து) என்ற கணக்கிலும், ஐதராபாத் 3-1 (ஒரு ஆட்டம் ரத்து) என்ற கணக்கிலும் வெற்றி-தோல்விகளை வசப்படுத்தி உள்ளன.
* இரு அணிகளும் கடைசியாக மோதிய 5 ஆட்டங்களிலும் கொல்கத்தாவே வென்றுள்ளது.

The post 67வது லீக் போட்டியில் கோப்பையை நோக்கி குஜராத் கோட்டையை விட்ட சென்னை: ஐபிஎல்லில் இன்று 2 ஆட்டங்கள் appeared first on Dinakaran.

Related Stories: