லண்டன்: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியின் முதல் நாளான நேற்று, தென் ஆப்ரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் ரபாடாவின் மந்திரப் பந்து வீச்சில் சிக்கிய ஆஸ்திரேலியா அணி, 212 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (டபிள்யுடிசி) தொடரின் இறுதிப் போட்டி, லண்டன் மாநகரின் லார்ட்ஸ் அரங்கில் நேற்று, ஆஸ்திரேலியா – தென் ஆப்ரிக்கா அணிகள் இடையே நேற்று துவங்கியது. முதலில் களமிறங்கிய ஆஸி துவக்க வீரர்களில் ஒருவரான உஸ்மான் கவாஜா (0 ரன்), பின் வந்த கேமரூன் கிரீன் 4, மற்றொரு துவக்க வீரர் மார்னஸ் லபுஷனே 17, டிராவிஸ் ஹெட் 11 ரன்னில் அவுட்டாகினர். இடையில் பியு வெப்ஸ்டர் (72 ரன்), ஸ்டீவன் ஸ்மித் (66 ரன்) ஆகிய இருவர் மட்டும் தென் ஆப்ரிக்காவின் பந்து வீச்சை சமாளித்து ரன்களை எடுத்தனர்.
மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்ததால், 56.4 ஓவரில், ஆஸி, 212 ரன் மட்டும் எடுத்து ஆல் அவுட்டானது. தென் ஆப்ரிக்கா தரப்பில், காகிஸோ ரபாடா அற்புதமாக பந்து வீசி 5, மார்கோ யான்சன் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். பின், முதல் இன்னிங்சை ஆடிய தென் ஆப்ரிக்காவின் துவக்க வீரர் அய்டன் மார்க்ரம், ஹேசல்வுட் வீசிய முதல் ஓவரில் ரன் எடுக்காமல் அவுட்டானார். பின், ரையான் ரிக்கெல்டன் 16 ரன்னில் வீழ்ந்தார். 9 ஓவர் முடிவில் தென் ஆப்ரிக்கா, 2 விக்கெட் இழப்புக்கு 19 ரன் எடுத்திருந்தது. வியான் முல்டர் (1 ரன்), டெம்பா பவுமா (0 ரன்) களத்தில் இருந்தனர்.
The post டபிள்யுடிசி இறுதிப் போட்டி ரபாடாவின் வேகத்தில் சுருண்ட ஆஸ்திரேலியா appeared first on Dinakaran.