உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் மனு பாக்கர் ஏமாற்றம்

முனிச்: உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியின் முனிச் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவின் இறுதிச் சுற்றுக்கு 8 பேரில் ஒருவராக நுழைந்த இந்திய நட்சத்திர வீராங்கனை மனு பாக்கர் 20 புள்ளிகளுடன் 5-வது இடமே பிடித்தார். சீனாவின் யுஜி சன் 38 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இதே போல் ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் மூன்று நிலை பிரிவில் இந்தியாவின் செயின் சிங் 407 புள்ளிகளுடன் 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

The post உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் மனு பாக்கர் ஏமாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: