குவீன்ஸ் கிளப் டென்னிஸ் காலிறுதியில் கீஸ், டயானா

லண்டன்: பிரிட்டன் தலைநகர் லண்டனில் குவீன்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த ஒற்றையர் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா ஓபன் சாம்பியனும், இரண்டாம் நிலை வீராங்கனையும், அமெரிக்காவை சேர்ந்தவருமான மேடிசன் கீஸ் ரஷ்யாவை சேர்ந்த அனஸ்தேசியா ஜகரோவாவை 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இந்த ஆட்டத்தில் முதல் செட்டில் 3-1 என்ற கணக்கில் பின்தங்கிருந்த கீஸ் பின்னர் அதிரடியாக விளையாடி அந்த செட்டை கைப்பாற்றினர்.

இரண்டாவது செட்டில் கீஸின் பலத்தை எதிர்கொள்ள முடியாமல் ஜகரோவா தடுமாற அந்த செட்டையும் கைப்பற்றினார். காலிறுதிக்கு முந்தைய 2வது சுற்று ஆட்டத்தில் ரஷ்ய வீராங்கனை டயானா ஷனைடர்(21வயது, 10வது ரேங்க்), கிரேட் பிரிட்டன் வீராங்கனை கேத்தி பவுல்டர்(28வயது, 34வது ரேங்க்) ஆகியோர் மோதினர். முதல் செட்டை கேத்தி 6-2 என்ற புள்ளிக் கணக்கிலும், 2வது செட்டை டயானா 6-3 என்ற புள்ளிக் கணக்கிலும் கைப்பற்றினர்.

அதனால் வெற்றி யாருக்கு என்பதை முடிவுச் செய்யும் 3வது செட்டில் முதல் புள்ளி எடுக்க நீண்ட நேரம் ஆனது. அதன் பிறகு வேகம் பெற்ற டயானா அந்த செட்டை 6-2 என்ற கணக்கில் வசப்படுத்தினார்.அதனால் ஒரு மணி 55 நிமிடங்கள் நீண்ட ஆட்டத்தை 2-1 என்ற செட்களில் வென்ற டயானா காலிறுதிக்குள் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவை சேர்ந்த மூன்றாம் நிலை வீராங்கனையான எம்மா நவரோ, பிரேசிலை சேர்ந்த பீட்ரிஸ் ஹடாட் மையாவை 1-6, 7-6, 6-3 என்ற கணக்கில் வீழ்த்தினார்.

மற்றொரு போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த அமண்டா அனிசிமோவா, பிரிட்டனை சேர்ந்த சோனாய் கர்தாலை 6-1, 6-3 என்ற கணக்கில் தோற்கடித்தார். இதன்மூலம் நவரோ, அனிசிமோவா தங்களின் காலிறுதி மோதலை உறுதிப்படுத்தி கொண்டனர். இரட்டையர் ஆட்டத்தில் எம்மா ராடுகானு, கேட்டி போல்டர் ஆகியோர் 6-2, 7-5 என்ற கணக்கில் முன்னணி நிலை வீராங்கனைகளாக எரின் ரூட்லிப், லியுட்மைலா கிச்செனோக்கிடம் தோல்வியடைந்து வெளியேறினர்.

* வெளியேறினார் போபண்ணா
ஜெர்மனியில் ஆண்களுக்கான போஸ் ஓபன் டென்னிஸ் போட்டி நடக்கிறது. அதன் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா/ சாண்டர் கில்(பெல்ஜியம்) இணை 5-7, 4-6 என நேர் செல்களில் டெய்லர் பிரிட்ஸ்(அமெரிக்கா)/ஜிரி லெஹாகா(செக் குடியரசு) இணையிடம் தோற்று வெளியேறியது. இந்த ஆட்டம் ஒரு மணி 13நிமிடங்கள் நடந்தது.

The post குவீன்ஸ் கிளப் டென்னிஸ் காலிறுதியில் கீஸ், டயானா appeared first on Dinakaran.

Related Stories: