ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி… டாப் ஸ்பாட்டுக்கு இலக்கு வருமா கேகேஆர் வழிக்கு? இன்று முதல் மீண்டும் ஐபிஎல்


பெங்களூர்: எல்லையில் ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக நிறுத்தப்பட்ட ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று பெங்களூரில் மீண்டும் தொடங்குகிறது. இன்றைய போட்டியில், பெங்களூரு, கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் தொடரில் மொத்தம் நடைபெற வேண்டிய 70 லீக் ஆட்டங்களில் 57 ஆட்டங்கள் மே 7ம் தேதி வரை நடத்தப்பட்டன. தொடர்ந்து மே 8ம் தேதி இரவு தர்மசாலாவில் நடந்த பஞ்சாப்-டெல்லி இடையிலான 58வது லீக் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. எல்லையில் பதற்றம் தணிந்ததை அடுத்து ஐபிஎல் ஆட்டம் இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது. ஏற்கனவே திட்டமிடப்பட்ட சென்னை, தர்மசாலா, முல்லான்பூர் (சண்டீகர்) ஆகிய நகரங்களில் எந்த ஆட்டமும் நடைபெறாது. கைவிடப்பட்ட பஞ்சாப்-டெல்லி ஆட்டம் உட்பட 13லீக் ஆட்டங்கள், 3 நாக் அவுட் ஆட்டங்கள், ஒரு இறுதி ஆட்டம் ஆகியவை இன்று முதல் நடக்கும். இந்நிலையில் நிறுத்தப்பட்ட 58வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞர்சர்ஸ் பெங்களூரு- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் களம் காண உள்ளன.

* பெங்களூரில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் வெளிநாட்டு வீரர்களில் எத்தனை பேர் களம் காணுவர் என்பது கேள்விக்குறி.
* பெங்களூர் அணியில் இடம் பெற்றுள்ள வேகம் ஜோஷ் ஹசல்வுட் மட்டும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றுள்ளார். அவரும் இம்மாதம் கடைசி வரை பெங்களூர் அணியுடன் நீடிப்பார்.
* வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இங்கிலாந்து அணியில் ஜேகப் பெதேல், பில் சால்ட் இடம் பெற்றுள்ளனர். இந்த தொடர் மே 29ம் தேதி தொடங்குவதால், இந்த வீரர்கள் இன்றைய ஆட்டம் உட்பட குறைந்தது 2 ஆட்டங்களிலாவது பெங்களூர் அணியுடன் தொடரும் வாய்ப்பு உள்ளது.

* கொல்கத்தா அணிக்கு அந்த பிரச்னை இல்லை. ஐபிஎல் போட்டி நிறுத்தப்பட்டதும், வெஸ்ட் இண்டீஸ் வீரர்களான ரோவ்மன் பாவெல், ஆந்த்ரே ரஸ்ஸல், சுனில் நரைன் ஆகியோர் சொந்த நாடு சொல்லவில்லை. மாறாக துபாயில் தங்க வைக்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக இந்தியா திரும்பியுள்ளனர்.
* இந்த 2 அணியிலும் உள்ள மற்ற வெளிநாட்டு வீரர்களுக்கு தொடர்ந்து விளையாடுவதில் பிரச்னை இல்லை.
* இந்த 2 அணிகளும் இதுவரை 35 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அவற்றில் கொல்கத்தா 20, பெங்களூர் 15 ஆட்டங்களில் வென்றுள்ளன.
* இந்த ஆட்டங்களில் அதிகபட்சமாக கொல்கத்தா 222, பெங்களூர் 221 ரன் குவித்துள்ளன.

* குறைந்தபட்சமாக கொல்கத்தா 84 ரன்னிலும், பெங்களூர் 49 ரன்னிலும் சுருண்டுள்ளன.
* இந்த 2 அணிகளும் கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் கொல்கத்தா 4-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
* ரஜத் பட்டிதார் தலைமையிலான பெங்களூர் இது வரை விளையாடிய 11 லீக் ஆட்டங்களில் 8ல் வெற்றியும், 3ல் தோல்வியையும் பார்த்துள்ளது.
* அதனால் புள்ளிப்பட்டியலில் 16 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து அடுத்தச் சுற்றுக்கான வாய்ப்பில் பிரகாசமாக இருக்கிறது.

* இன்றைய ஆட்டத்தில் பெங்களூர் வெற்றிப் பெற்றால் முதல் அணியாக அடுத்தச் சுற்று வாய்ப்பை பெறும்.
* நடப்பு சாம்பியன் கொல்கத்தா 12 லீக் ஆ ட்டங்களில் ஆடி 5 வெற்றியும், 6 தோல்வியையும் சந்தித்துள்ளது. ஒரு ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது.
* எனவே அஜி்ங்கிய ரகானே தலைமையிலான கொல்கத்தா 11 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது.
* இத்துடன் இன்னும் 2 ஆட்டங்களில் விளையாட வேண்டிய நிலையில் வெற்றிப் பெற்றாலும் கொல்கத்தாவின் அடுத்தச் சுற்று வாய்ப்பு கனவுதான்.

* எனினும் இன்றைய ஆட்டத்தில் வெற்றிப் பெற்றால் அடுத்தச் சுற்று வாய்ப்பை கொல்கத்தா தக்க வைக்கும். தோற்றால் சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத் அணிகளை தொடர்ந்து 4வது அணியாக நடப்பு சாம்பியன் கொல்கத்தாவும் லீக் சுற்றுடன் வெளியேறும்.
* பெங்களூர் எம் சின்னசாமி அரங்கில் இந்த 2 அணிகளும் இதுவரை 12 முறைே மோதியுள்ளன.
* அவற்றில் கொல்கத்தா 8-4 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.

The post ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி… டாப் ஸ்பாட்டுக்கு இலக்கு வருமா கேகேஆர் வழிக்கு? இன்று முதல் மீண்டும் ஐபிஎல் appeared first on Dinakaran.

Related Stories: