இங்கிலாந்தில் கில் சிறப்பாக ஆடுவார்: சவுரவ் கங்குலி நம்பிக்கை

கொல்கத்தா: இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக சுப்மன்கில் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி அளித்துள்ள பேட்டி: கேப்டன் கில்லுக்கு வாழ்த்துக்கள். அவர் பேட்டிங்கில் சிறப்பாக பணியாற்ற முடியும் என நான் நம்புகிறேன். அவர் ஒரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன். நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்தில் ஸ்விங், மற்றும் சீம் இருக்கும்.

எனவே தற்காப்புடன் ஆட வேண்டும். டெஸ்ட்டின் காலையில் முதல் ஒரு மணி நேரம் மிக முக்கியம். மதிய உணவுக்கு பிறகும், தேநீர் இடைவேளைக்கு பிறகும் வித்தியாசம் இருக்கும். முதல் செசனில் ஒரு விக்கெட்டுக்கு மேல் இழந்துவிடக்கூடாது. அப்படி செயல்பட்டால் டெஸ்ட் போட்டியை வெல்லும் நிலையை அடையலாம், என்றார்.

 

The post இங்கிலாந்தில் கில் சிறப்பாக ஆடுவார்: சவுரவ் கங்குலி நம்பிக்கை appeared first on Dinakaran.

Related Stories: