பிசிசிஐ நடவடிக்கை: வெற்றியை கொண்டாட கட்டுப்பாடு

புதுடெல்லி: சமீபத்தில் முடிந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்று சாம்பியன் ஆனது. அதைத் தொடர்ந்து நடந்த வெற்றி விழாக் கொண்டாட்டத்தின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரியளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கிரிக்கெட் தொடர்பான வெற்றி விழாக் கொண்டாட்டங்களை கட்டுப்படுத்தும் வகையில் விதிகளை வகுக்க, தேவஜித் சைக்கியா தலைமையில் குழு ஒன்றை பிசிசிஐ அமைத்துள்ளது. இக்குழுவில், பிரப்தேஜ் சிங் பாட்டியா, ராஜீவ் சுக்லா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். 15 நாளில் அறிக்கை சமர்ப்பிக்கும்படி, இக்குழு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

The post பிசிசிஐ நடவடிக்கை: வெற்றியை கொண்டாட கட்டுப்பாடு appeared first on Dinakaran.

Related Stories: