அதனை தொடர்ந்து மேற்கொண்ட சீரிய முயற்சிகள் மூலம் 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்த ஆண்டு 250 தரவரிசைப் புள்ளிகளுக்கான சர்வதேச அளவிலான டபிள்யூடிஏ மகளிர் டென்னிஸ் போட்டி 2வது முறையாக நடைபெற உள்ளது. இந்தப் போட்டி அக்.27ம் தேதி முதல் நவ.2ம் தேதி வரை சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் அரங்கில் நடைபெறும். இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து ஒற்றையர் பிரிவில் 32 வீராங்கனைகளும், இரட்டையர் பிரிவில் 16 இணைகளும் பங்கேற்பர். கடந்த முறை போன்று இந்த முறையும் தமிழ்நாடு அரசு, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவற்றின் முழு உதவியுடன் போட்டி நடத்தப்படும்.
The post அக்.27 முதல் நவ.2 வரை சென்னையில் மீண்டும் மகளிர் டென்னிஸ் appeared first on Dinakaran.