கோலாலம்பூர்: மலேசியாவில் நடக்கும் ஹாக்கி போட்டியில், வேல்ஸ் அணியை தென் கொரியா அணி வீழ்த்தியது. தரவரிசையில் முதல் 9 இடங்களில் உள்ள அணிகள் புரோ ஹாக்கி லீக் விளையாடி வருகின்றனர். அவற்றுக்கு அடுத்த இடங்களில் உள்ள ஆடவர் அணிகள் இடையிலான ஹாக்கிப் போட்டிகள் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடந்து வருகின்றன. முதல் ஆட்டத்தில் நேற்று முன்தினம் கொரியா 5-6 என்ற கோல் கணக்கில் போராடி பிரான்சிடம் தோற்று இருந்தது. 2வது நாளான நேற்று முதல் ஆட்டத்தில் தென் கொரியா- வேல்ஸ் அணிகள் மோதின. வேல்ஸ் தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவிடம் 4-4 என்ற கோல் கணக்கில் டிரா செய்திருந்தது. அதனால் இரு அணிகளும் முதல் வெற்றிக்காக மல்லுக்கட்டின. அதில் கூடுதல் வேகம் காட்டிய கொரியா 3-2 என்ற கோல் கணக்கில் முதல் வெற்றியை வசப்படுத்தியது. அதேபோல் மற்றொரு ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 4-3 என்ற கோல் கணக்கில் தென் ஆப்ரிக்கா அணியை வீழ்த்தியது.
The post தேசிய ஹாக்கிப் போட்டி வேல்ஸ் அணியை வீழ்த்திய கொரியா appeared first on Dinakaran.