27 வருடத்திற்குப் பிறகு ஐசிசி சாம்பியன் ஆகியுள்ள உங்கள் வெற்றி, சென்னை வரை எதிரொலிக்கிறது: தென் ஆப்ரிக்க அணிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: 27 வருடத்திற்குப் பிறகு ஐசிசி சாம்பியன் ஆகியுள்ள உங்கள் வெற்றி, சென்னை வரை எதிரொலிக்கிறது என்று தென் ஆப்ரிக்க அணிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியுள்ளதாவது:
மகத்தான வெற்றி பெற்ற தென்ஆப்ரிக்காவுக்கு வாழ்த்துகள். அனைத்து சவால்களையும் எதிர்த்த கேப்டன் பவுமாவுக்கு சிறப்பு பாராட்டு. அற்புதமான ஆட்டத்தால், விமர்சனம் செய்த வாய்களை அடைத்துவிட்டீர்கள். எய்டன் மார்க்ரமின் பங்களிப்பை பாராட்டியே ஆகவேண்டும். லார்ட்ஸ் மைதானத்தில் நீங்கள் பெற்ற வெற்றி, சென்னை வரை எதிரொலிக்கிறது. இவ்வாறு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

The post 27 வருடத்திற்குப் பிறகு ஐசிசி சாம்பியன் ஆகியுள்ள உங்கள் வெற்றி, சென்னை வரை எதிரொலிக்கிறது: தென் ஆப்ரிக்க அணிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: