2025-27 டபிள்யுடிசி சாம்பியன்ஷிப் தொடர் 18 டெஸ்ட்களில் இந்தியா மோதல்: 9 நாடுகளின் போட்டிகள் பட்டியல் வெளியானது

லண்டன்: 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பைக்காக நடைபெறும் போட்டித் தொடர் அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நேற்று வெளியிட்டது. அதன்படி, அடுத்த 2 ஆண்டுகளில், 18 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா ஆடவுள்ளது.  ஐசிசியில் அங்கம் வகிக்கும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, வங்கதேசம், நியுசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (டபிள்யுடிசி) 2025-27 தொடரின்போது 71 போட்டிகளில் மோதவுள்ளன. அதற்கான அட்டவணையை ஐசிசி நேற்று வெளியிட்டது.

இந்த தொடரின் முதல் போட்டி, வரும் 17ம் தேதி, இலங்கை – வங்கதேசம் இடையே இலங்கையின் காலே நகரில் துவங்கவுள்ளது. இத் தொடரில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியா அணி 22 போட்டிகளிலும், இங்கிலாந்து 21 போட்டிகளிலும், அதற்கு அடுத்ததாக, இந்தியா 18 போட்டிகளிலும் மோதவுள்ளன. இந்தியா ஆடும் முதல் போட்டி, இங்கிலாந்துக்கு எதிராக வரும் 20ம் தேதி லண்டனில் நடைபெற உள்ளது. சமீபத்தில் முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025 தொடர் சாம்பியனான தென் ஆப்ரிக்கா, வரும் அக்டோபரில் பாகிஸ்தானுடன், தனது முதல் போட்டியாக மோதவுள்ளது.

The post 2025-27 டபிள்யுடிசி சாம்பியன்ஷிப் தொடர் 18 டெஸ்ட்களில் இந்தியா மோதல்: 9 நாடுகளின் போட்டிகள் பட்டியல் வெளியானது appeared first on Dinakaran.

Related Stories: