சர்வதேச அளவில், 400 போட்டிகள் ஆடிய 8வது வீரர் என்ற பெருமையும் மன்பிரீத் சிங்கிற்கு கிடைத்துள்ளது. நேற்றைய போட்டி முடிந்த பின்னர், மன்பிரீத் சிங்கிற்கு சக வீரர்கள் உரிய மரியாதை செலுத்தி கவுரவப்படுத்தினர். தவிர, 400 போட்டிகளில் ஆடியதற்கான நினைவுப்பரிசாக, கையெழுத்திடப்பட்ட டிசர்ட்டை ஆஸி அணியினர் வழங்கினர். மன்பிரீத் சிங், 2011ல், தனது 19வது வயதில் முதல் முறையாக இந்திய அணிக்காக ஹாக்கி போட்டியில் ஆடினார்.
அவர் கேப்டனாக இருந்தபோது, டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில், இந்திய ஹாக்கி அணிக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. தவிர, 2013, 2018, 2023, 2024 ஆகிய ஆண்டுகளில், ஆசிய சாம்பியன்ஸ் கோப்பைகளை அவர் வென்றுள்ளார். 2014, 2023ம் ஆண்டுகளில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஹாக்கி பிரிவில், மன்பிரீத் சிங் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
The post 400 களம் கண்ட மன்பிரீத் சிங்: 2வது இந்திய வீரராக சாதனை appeared first on Dinakaran.