இறகு பந்து பயிற்சி மையம் கலெக்டர் தொடங்கி வைத்தார் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில்

வேலூர், மே 6: காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இறகுப்பந்து பயிற்சி மையத்தை கலெக்டர் சுப்புலட்சுமி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஸ்டார் அகாடமி பயிற்சி மையம் தொடங்கி வைக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டத்தில் ஸ்டார் அகாடமி இறகுப்பந்து பயிற்சி மையத்தை கலெக்டர் சுப்புலட்சுமி தொடங்கி வைத்து, விளையாட்டு வீரர்களுக்கு சீருடைகள், உபகரணங்களை வழங்கினார்.

ஸ்டார் அகாடமியில் இறகு பந்து பயிற்சி மையத்திற்கு 20 மாணவர்கள், 20 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தினமும் காலை, மாலை என இரு வேளைகளிலும் இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் பயிற்சியின் போது பால், முட்டை, பழம் மற்றும் லெமன் ஜூஸ் போன்ற சத்தான உணவுகள் வழங்கப்படுகின்றன. இந்த மையம் தொடர்ந்து 11 மாதங்கள் நடைபெற உள்ளது. இதில் மாநகராட்சி மேயர் சுஜாதா, மண்டலக்குழுத்தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, மாவட்ட விளையாட்டு அலுவலர் சுப்பிரமணி, காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post இறகு பந்து பயிற்சி மையம் கலெக்டர் தொடங்கி வைத்தார் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் appeared first on Dinakaran.

Related Stories: