திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்ரா பவுர்ணமி நாளுக்கான கிரிவல நேரம் அறிவிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமையில் கிரிவலம் செல்வதற்கு வருடத்தின் 365 நாட்களும் ஏற்றதாகும். எந்த மாதத்தில், எந்த நாளில், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கிரிவலம் செல்லலாம். அனைத்துமே சிறப்பு வாய்ந்தவை என்றாலும் பௌர்ணமி நாளில் கிரிவலம் செல்வதையே அதிகமானவர்கள் வழக்கமாக வைத்துள்ளார்கள்.

பெளர்ணமி கிரிவலமே மகத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்ரா பவுர்ணமி நாளுக்கான கிரிவல நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. மே 11-ம் தேதி இரவு 8.47 முதல் மே 12-ம் தேதி இரவு 10.43 வரை கிரிவலம் செல்ல உகந்த நேரம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சித்ரா பௌர்ணமி கிரிவலத்திற்காக 20 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலையார் திருக்கோயில் மற்றும் கிரிவலப் பாதையை உள்ளிட்ட இடங்களில் பக்தர்களுக்குத் தேவையான இடங்களில் போதுமான கழிவறைகளும் குடிநீர் வசதிகளும் ஏற்பாடு செய்து தரப்படும் எனவும் அனுமதி பெற்ற இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும் என்றும் முறையான தரமான உணவுகள் வழங்க வேண்டும் இல்லையேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் தெரிய்வத்துள்ளார்.

The post திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்ரா பவுர்ணமி நாளுக்கான கிரிவல நேரம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: