காங்கிரஸ் கட்சியை களங்கப்படுத்த பொய்களை ஆயுதமாக்கியது பாஜக: பவன் கெரா

டெல்லி: காங்கிரஸ் கட்சியை களங்கப்படுத்த பொய்களை ஆயுதமாக்கியது பாஜக என காங்கிரஸ் மூத்த தலைவர் பவன்கெரா தெரிவித்துள்ளார். காமல்வெல்த் போட்டியில் PMLA சட்டத்தின் கீழ் பதிந்த ஊழல் வழக்கில் போதிய ஆதாரம் இல்லை ED அறிக்கை தாக்கல் செய்தது. 2010-ல் காமன்வெல்த் விளையாட்டு ஊழல் வழக்கில் போதிய ஆதாரம் இல்லை என்று ED இறுதி அறிக்கை தாக்கல் செய்தது. அமலாக்கத்துறை தாக்கல் செய்த இறுதி அறிக்கையை டெல்லி ஐகோர்ட் ஏற்றுக் கொண்டது.

இந்நிலையில் இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள காங். மூத்த தலைவர் பவன் கெரா; 2ஜி, காமன்வெல்த், நிலக்கரி சுரங்க ஊழல் போன்றவற்றால் காங். மீது பாஜக களங்கத்தை கற்பித்து வந்தது. அமலாக்கத்துறையின் அறிக்கையின் மூலம் பாஜகவின் பொய்கள் தவிடு பொடியாகியது; உண்மை உயர்ந்து நிற்கிறது. வழக்குகள் நீதியை நிலைநாட்ட போடப்பட்டவை அல்ல; அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்காக போடப்பட்டவை. நிர்வாக தோல்வியை திசைதிருப்ப, பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக இடம்பெற செய்யவுமே பாஜக வழக்கு.

ஊழல் நடக்கவில்லை என ED அறிக்கை தாக்கல் செய்த நிலையில் நாட்டு மக்களிடம் பிரதமர் மன்னிப்பு கேட்பாரா? டெல்லி மக்களிடம் மன்னிப்பு கேட்பாரா கெஜ்ரிவால் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

The post காங்கிரஸ் கட்சியை களங்கப்படுத்த பொய்களை ஆயுதமாக்கியது பாஜக: பவன் கெரா appeared first on Dinakaran.

Related Stories: