சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வரும் மே 1 முதல் ஜூன் 1 வரை கோடை விடுமுறை : அவசரகால வழக்குகளை விசாரிக்கும் அமர்வு அறிவிப்பு

சென்னை: சென்னை ஐகோர்ட்டுக்கு வரும் மே 1 முதல் ஜூன் 1 வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாள்களில் விடுமுறை கால நீதிமன்றம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கோடைக் கால விடுமுறையில் வழக்கு விசாரணைகள் மேற்கொள்வதற்கான நீதிபதிகளை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது. அதன்படி, அவசர வழக்குகளை நீதிபதிகள் மாலா, அருள் முருகன், விக்டோரியா கெளரி ஆகியோர் மே 7, 8 தேதிகளில் அவசர வழக்குகளை விசாரிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நீதிபதிகள் சுவாமிநாதன், லட்சுமி நாராயணன், நிர்மல் குமார் ஆகியோர் மே 14, 15, 21 மற்றும் 22 ஆகிய தேதிகளிலும், நீதிபதிகள் செந்தில் குமார் ராமமூர்த்தி, சத்திய நாராயணா பிரசாத், திலகவதி ஆகியோர் மே 28, 29 ஆகிய தேதிகளிலும் விசாரிப்பார்கள். இதே போல மதுரைக் கிளையில், நீதிபதிகள் தண்டபாணி, சக்திவேல், பாலாஜி, ஜோதிராமன், வேல் முருகன், ராமகிருஷ்ணன், ராஜசேகர், ஸ்ரீமதி, விஜயகுமார், வடமலை, ஆனந்த் வெங்கடேஷ், ஷமீன் அகமதி, பூர்ணிமா ஆகியோர் விடுமுறைக்கால நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

The post சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வரும் மே 1 முதல் ஜூன் 1 வரை கோடை விடுமுறை : அவசரகால வழக்குகளை விசாரிக்கும் அமர்வு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: