ஜம்மு – காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வலியுறுத்தி பிரதமர் மோடிக்கும் ராகுல் காந்தி கடிதம்!!

டெல்லி: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் அனுப்பியுள்ளார். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பல்வேறு தடை நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் நடந்தது தொடர்பாக விவாதம் நடத்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட பிரதமர் நரேந்திர மோடிக்கும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதல் ஒவ்வொரு இந்தியருக்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியாவில் அனைவரும் ஒன்றிணைந்து இருப்பதை காட்ட வேண்டும். நாடாளுமன்ற இரு அவைகளின் சிறப்புக் கூட்டத்தை ஒன்றிய அரசு கூட்டும் என்று எதிர்க்கட்சிகள் நம்பிக்கை கொண்டுள்ளது. அந்த கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் அவர்களது ஒற்றுமையையும், ஸ்திரத்தன்மையையும் காட்டுவர் என ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

The post ஜம்மு – காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வலியுறுத்தி பிரதமர் மோடிக்கும் ராகுல் காந்தி கடிதம்!! appeared first on Dinakaran.

Related Stories: