பராமரிப்பு பணிகள், பனரமைப்பு பணிகள், பலப்படுத்தும் பணிகள் மேற்கொண்டாலும் 142 அடி வரை மட்டுமே நீரை தேக்கி வைக்க தமிழக அரசுக்கு உரிமை உள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் வல்லக்கடவு- முல்லைப் பெரியாறு சாலையை செப்பனிடுவதற்கு அனுமதிக்க முடியாது. ஏற்கனவே உள்ள சாலையே அணை பராமரிப்பு பணிக்கான உபகரணங்களை எடுத்து செல்ல போதுமானது. தற்போதைய முல்லைப்பெரியாறு அணை பலவீனமாகவும், மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது. எனவே முல்லைப்பெரியாற்றில் புதிய அணை கட்டுவதே அனைத்துக்கும் தீர்வாக அமையும். முல்லைப்பெரியாறு அணையில் புதிய அணை கட்டுவது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும். புதிய அணை கட்டுவதற்கான மொத்த செலவையும் கேரள அரசே ஏற்கும். முல்லைப்பெரியாறு மேற்பார்வைக்குழுவை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு இல்லை. மேற்பார்வை குழுவை கலைத்து, அறிவிப்பாணை வெளியிட்டது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
The post முல்லைப்பெரியாற்றில் புதிய அணை கட்டுவதே அனைத்துக்கும் தீர்வாக அமையும்: உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு பிடிவாதம் appeared first on Dinakaran.