தாயை கொல்லப்பட்ட வழக்கில் தஷ்வந்த் விடுதலை – தமிழ்நாட்டையே உலுக்கிய வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!!

செங்கல்பட்டு : சென்னை குன்றத்தூர் அருகே தாயை கொன்ற வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி விடுதலை செய்யப்பட்டார். 2017ம் ஆண்டு சென்னை மாங்காட்டைச் சேர்ந்த ஹாசினி, வன்கொடுமைக்கு உள்ளாகி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சிறுமி வசித்து வந்த அதே குடியிருப்பில் தங்கியிருந்த தஷ்வந்த் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், தஷ்வந்த்தை அவரது தந்தை ஜாமீனில் வெளியே கொண்டு வந்தார். தங்களது வீட்டையும் குன்றத்தூருக்கு மாற்றி, தனது மகன் தஷ்வந்த்தை வீட்டுக்குள்ளேயே வைத்திருந்தார்.

9இதனிடையே தனது செலவுக்கு பணம் தராததால், ஹாசினி கொலையில் கைதாகி ஜாமினில் வெளியே இருந்த தஷ்வந்த் தனது தாயாரையும் கொலை செய்து மும்பைக்குத் தப்பினான். சென்னை காவல்துறையினர், தனிப்படை அமைத்து தஷ்வந்த்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே சிறுமி கொலை வழக்கில் தஷ்வந்துக்கு 2018ம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. உயர் நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்ய நிலையில், உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஜாமினில் வெளியே வந்து தாயை கொலை செய்ததாக கைதான வழக்கில் விடுதலை செய்தது செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம். தந்தை பிழற்சாட்சியாக மாறிய நிலையில், போதிய ஆதாரங்கள் எனக்கூறி விடுதலை செய்யப்பட்டார்.

The post தாயை கொல்லப்பட்ட வழக்கில் தஷ்வந்த் விடுதலை – தமிழ்நாட்டையே உலுக்கிய வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: