திருச்சி உறையூரில் கழிவு நீர் கலந்த குடிநீரால் 3 பேர் உயிரிழந்தார்கள் என்பது ஆதாரமற்ற செய்தி: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

சென்னை: திருச்சி உறையூரில் கழிவு நீர் கலந்த குடிநீரால் 3 பேர் உயிரிழந்தார்கள் என்பது ஆதாரமற்ற செய்தி என எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில் தெரிவித்தார். அதில்,

*திருச்சி மாநகராட்சியில் குடிநீரில் கழிவு நீர் கலந்ததாக வெளியானதற்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்து.

“திருச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 53 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

*குடிநீர் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டதில் குடிப்பதற்கு ஏதுவான நீர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

*கோவில் திருவிழாவில் வழங்கப்பட்ட மோர், குளிர்பானங்களால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருக்கலாம்.

*குழாய் மூலம் குடிநீர் வழங்குவது நிறுத்தப்பட்டு லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

*சீரான குடிநீர் விநியோகம் உறையூர் பகுதியில் நடைபெற்று வருகிறது.

* பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

*திருச்சி உறையூரில் கழிவு நீர் கலந்த குடிநீரால் 3 பேர் உயிரிழந்தார்கள் என்பது ஆதாரமற்ற செய்தி.

*பிரியங்கா என்ற குழந்தை இறந்ததற்கு கழிவுநீர்தான் காரணம் என்பதற்கு ஆதாரம் இல்லை.

*குளிர்பானங்கள் அருந்தியதால் வயிற்றுப்போக்கு காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என பதில் தெரிவித்தார்.

 

 

The post திருச்சி உறையூரில் கழிவு நீர் கலந்த குடிநீரால் 3 பேர் உயிரிழந்தார்கள் என்பது ஆதாரமற்ற செய்தி: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில் appeared first on Dinakaran.

Related Stories: