சமத்துவம் தழைக்க சாதியில்லா சமூகம் அமைக்க என்றும் உறுதியுடன் உழைப்போம்: துணை முதல்வர் உதயநிதி

சென்னை: ‘சமத்துவம் தழைக்க சாதியில்லா சமூகம் அமைக்க என்றும் உறுதியுடன் உழைப்போம். ஊர்களில் இருக்கும் காலனி எனும் சாதிய அடக்குமுறைச் சொல்லை நீக்கவிருக்கிறது’ திராவிட மாடல் அரசு’ என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது; “பெயர்களில் இருந்த சாதி ஒட்டினை ஒழித்த திராவிட இயக்கத்தின் வழியில், ஊர்களில் இருக்கும் ‘காலனி’ எனும் சாதிய அடக்குமுறைச் சொல்லை நீக்கவிருக்கிறது நம் திராவிட_மாடல் அரசு.

முதலமைச்சரின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை மனதார வரவேற்கிறோம்.

ஈராயிரம் ஆண்டுகள் இறுகிப்போய் இருக்கும் சாதியை வீழ்த்துவதற்கான பயணத்தில் முக்கிய மைல்கல் இது.

சமத்துவம் தழைக்க – சாதியில்லா சமூகம் அமைக்க என்றும் உறுதியுடன் உழைப்போம்” என தெரிவித்துள்ளார்.

The post சமத்துவம் தழைக்க சாதியில்லா சமூகம் அமைக்க என்றும் உறுதியுடன் உழைப்போம்: துணை முதல்வர் உதயநிதி appeared first on Dinakaran.

Related Stories: