ஆரணி அடுத்த மெய்யூர் கிராமத்தில் பாஞ்சாலி அம்மன் கோயிலில் அர்ஜூனன் தபசு மரம் ஏறும் விழா

ஆரணி, ஏப்.11: ஆரணி அடுத்த மெய்யூர் கிராமத்தில் பழமையான பாஞ்சாலி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் அக்னி வசந்த விழா முன்னிட்டு கடந்த மாதம் 28ம் தேதி பக்தர்கள் காப்புகட்டிக் கொண்டு, அலகு நிறுத்தப்பட்டு மகாபாரத சொற்பொழிவு விழா தொடங்கியது. இதையொட்டி, கோயிலில் தினமும் சொற்பொழிவில் சந்திரன் மரபில் சுந்தரன் சந்தனு, வீடுமன் சிறப்பும் மூவேந்தர் பிறப்பும், கர்ணன், கண்ணன் பிறப்பும், தர்மன் பிறப்பு, வீர விளையாட்டு, வித்தைப் பயிற்சி, அறங்கேற்றமும் அம்மன் அவதாரம், பகாசூர வதம், துறவு வேடமும் சுபத்திரை மணமும் உள்ளிட்ட சொற்பொழிவு நிகழ்ச்சிகள் தினமும் நடைபெற்று வருகிறது.

மேலும், வில்வளைப்பு, சுபத்திரை கல்யாணம், ராஜ சூயயாகம், பகடைத்துகில், குறவஞ்சி, கிருஷ்ணன் தூது, கர்ணமோட்சம், பதினெட்டாம் போர் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. இதைதொடர்ந்து, நேற்று அரச்சுனன் தபசுமரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, அர்ச்சுனன் தபசு மரம் ஏறி சிவபூஜை செய்யப்பட்டது. அப்போது, பெண்கள் மீது சுவாமி வந்து அருள்வாக்கு சொல்லியது.
தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்கப்பட்டது. இதில் ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்செய்து வழிப்பட்டனர். மேலும், வரும் 16ம் தேதி சொற்பொழிவில், துரியோதனன் படுகளமும், தீ மீதி திருவிழாவும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

The post ஆரணி அடுத்த மெய்யூர் கிராமத்தில் பாஞ்சாலி அம்மன் கோயிலில் அர்ஜூனன் தபசு மரம் ஏறும் விழா appeared first on Dinakaran.

Related Stories: