வேலூர், ஏப். 22: வேலூர் விளையாட்டு மைதானத்தில் 21 நாட்களுக்கு கோடை கால விளையாட்டு பயிற்சி முகாமிற்கு முன்புபதிவு செய்து கொள்ளலாம் என்று கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் சுப்புலட்சுமி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வேலூர் மாவட்டத்தில் கோடை கால பயிற்சி முகாம் காட்பாடியில் செயல்பட்டு வரும் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வரும் 25ம் தேதி முதல் 15ம் தேதி வரை 21 நாட்கள் காலை மற்றும் மாலை ஆகிய இருவேளையும் நடைபெறவுள்ளது.
பயிற்சி முகாமானது தடகளம், கால்பந்து, வளைகோல்பந்து, வுஷு மற்றும் குத்துச்சண்டை ஆகிய விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இக்கோடை கால பயிற்சி முகாமில் 18 வயதிற்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருக்கும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இக்கோடைகால பயிற்சி முகாமில் கலந்து கொள்வதற்கு எந்த விதமான பயிற்சி கட்டணமும் கிடையாது. பயிற்சியின் முடிவில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பங்கேற்ப்பு சான்றிதழ் வழங்கப்படும். கோடைகால பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், வேலூர், காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வரும் 25ம் தேதி காலை 6.00 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அரங்கம். காட்பாடியில் நேரில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
The post கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் தகவல் வேலூர் விளையாட்டு மைதானத்தில் 21 நாட்களுக்கு appeared first on Dinakaran.