தனியார் நிறுவன ஊழியரிடம் லேப்டாப் திருடிய வாலிபர் கைது ரயில்வே போலீசார் நடவடிக்கை காட்பாடி அருகே ஒடும் ரயிலில்

வேலூர், ஏப்.24: காட்பாடி அருகே ஓடும் ரயிலில் தனியார் நிறுவன ஊழியரிடம் லேப்டாப் திருடிய வாலிபரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். கேரளா மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் சுதீஷ்(34). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு திருவனந்தபுரம் எக்ஸ்பிரசில் சென்னைக்கு ரயிலில் பயணம் மேற்கொண்டார். அவர் லேப்டாப் பேக் ஒன்றை எடுத்து வந்துள்ளார். அதிகாலை 5.30 மணியளவில் காட்பாடி ரயில்நிலையத்தை கடந்ததும் தான் கொண்டு வந்த லேப்டாப் பேக் மாயமானது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுதீஷ் குறித்து காட்பாடி ரயில்வே போலீசில் ஆன்லைன் மூலம் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் உஷாராணி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி கேமிரா பதிவுகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் காட்பாடி 1வது பிளாட்பாரத்தில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் ஒரு வாலிபர் நின்று கொண்டு இருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஈரோடு மாவட்டம் கொல்லம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஹரி பிராத் (19) என்பதும், இவர் லேப்டாப் பேக்கை திருடி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு பேக், லேப்டாப், லேப்டாப் சார்ஜர், புளூடூத் மவுஸ் ஆகியவை பறிமுதல் செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

The post தனியார் நிறுவன ஊழியரிடம் லேப்டாப் திருடிய வாலிபர் கைது ரயில்வே போலீசார் நடவடிக்கை காட்பாடி அருகே ஒடும் ரயிலில் appeared first on Dinakaran.

Related Stories: