15,000 பூந்தொட்டிகளில் நாற்று நடும் பணி தீவிரம்

ஏற்காடு, ஏப்.10:ஏற்காட்டில் கோடை விழாவுக்காக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூந்தொட்டிகளில் 50க்கும் மேற்பட்ட வகைகளில் மலர் நாற்றுகள் நடும் பணியில் தோட்டக்கலை துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஏற்காட்டில் வரும் மே மாதம் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. இதையொட்டி, அங்குள்ள அண்ணா பூங்காவில், மலர் கண்காட்சிக்கான முன்னேற்பாடுகள் தொடங்கியுள்ளன. இதற்காக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூந்தொட்டிகளில், சுமார் 50 வகையான வண்ண மலர்களுக்கான நாற்றுகளை நடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஆப்பிரிக்கன் மேரிகோல்டு, டவாப் சால்வியா, ஜீனியா, பெலிசியா, ஆஸ்தர், பிரென்ச் மேரிகோல்டு என பல்வேறு மலர்களை வளர்க்கும் பணிகளில் தோட்டக்கலைத்துறை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கோடை விழாவையொட்டி, அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், ஏரி பூங்கா ஆகிய இடங்களில் வண்ண ரோஜாக்கள் பூத்து குலுங்கி ரம்மியமாக காட்சியளித்து வருகிறது. அதேபோல் தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம், சுற்றுச்சூழல் பூங்கா உள்ளிட்ட முக்கிய இடங்களில் சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் பல்வேறு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

The post 15,000 பூந்தொட்டிகளில் நாற்று நடும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: