காதல் ஜோடி போலீசில் தஞ்சம்

இடைப்பாடி, ஏப். 18: இடைப்பாடி அடுத்த பூலாம்பட்டி கூடக்கல் பகுதியை சேர்ந்தவர் தனுஷ்(20). இவர் டிப்ளமோ முடித்துவிட்டு, கோவையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். தினமும் பஸ்சில் சென்று வந்தார். ஈரோடு மாவட்டம், பவானி தளவாய்பட்டி மணிகண்டன் மகள் தக்‌ஷனா ஸ்ரீ(20). இவர் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இருவரும் பஸ்சில் செல்லும்போது பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. இவர்களது காதல் பெற்றோருக்கு தெரியவரவே, எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 16ம்தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, திருச்செங்கோடு விநாயகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டு, நேற்று பூலாம்பட்டி காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். போலீஸ் எஸ்ஐ மலர்விழி, இருவரின் பெற்றோரை நேரில் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்கள் ஏற்றுக்கொண்டதால், அறிவுரை கூறி மணமக்களை அவர்களுடன் அனுப்பி வைத்தார்.

The post காதல் ஜோடி போலீசில் தஞ்சம் appeared first on Dinakaran.

Related Stories: