கெங்கவல்லி, ஏப்.22: சேலம் மாவட்டம், கெங்கவல்லி பேரூராட்சி 6வது வார்டு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் பிரவீன்குமார்(33). கட்டிட தொழிலாளியான இவர், நேற்று காலை அங்குள்ள அங்காளம்மன் கோயில் அருகில், கெங்கவல்லி- வீரகனூர் சாலையில் நின்றவாறு குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டார். இருசக்கர வாகனத்தில் செல்லும் நபர்களை தடுத்து நிறுத்தி, கடும் வாக்குவாதம் செய்ததோடு, தகாத வார்த்தையில் திட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த தகவலின்பேரில், கெங்கவல்லி போலீசார் விரைந்து சென்று, பிரவீன்குமாரை மடக்கி பிடித்தனர். பின்னர், மதுபோதையில் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு செய்ததாக வழக்குப்பதிந்து, அவரை கைது செய்தனர்.
The post நடுரோட்டில் ரகளை செய்த வாலிபர் கைது appeared first on Dinakaran.