1072 ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்

மேட்டூர், ஏப்.10: மேட்டூர் அருகே உள்ள கோவிந்தபாடியில், முதலமைச்சர் பிறந்தநாள் விழா கொளத்தூர் ஒன்றிய திமுக சார்பில் நடைபெற்றது. விழாவில் 1072 ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய சேலம் எம்பி டி.எம்.செல்வகணபதி கொட்டும் மழையில் குடை பிடித்தபடி பேசியதாவது: தமிழ்நாட்டுக்கு ஏழு மடங்கு நிதி ஒதுக்கியதாக கூறும் பிரதமர், குஜராத், மகாராஷ்டிரா, பீகாருக்கு, ராஜஸ்தான் போன்ற பாஜ ஆளும் மாநிலங்களுக்கு கொடுத்த நிதி பட்டியலை வெளியிட முடியுமா? தமிழ்நாட்டுக்கு ₹6000 கோடி வழங்கினால், பாஜ ஆளும் மாநிலங்களுக்கு ₹60 ஆயிரம் கோடி வழங்குகிறது. கல்வி நிதி ₹2,152 கோடி, 100 நாள் வேலைத்திட்ட நிதி ₹4,071 கோடி, ஜல்சக்தி திட்டத்திற்கு ₹3000 கோடி நிதியை நிறுத்தியுள்ளது. நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு கொடுத்ததை வெள்ளை அறிக்கையாக வெளியிட முடியுமா?.

தமிழக மீனவர்கள் படகுகள் பறிப்பு, மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி, தமிழனை என்றைக்கும் ஏமாற்ற முடியாது. சேலம் மேற்கு மாவட்டம் முழுவதும், 25000 ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் முதல்வரின் பிறந்தநாள் கூட்டத்தில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார். விழாவில், கொளத்தூர் ஒன்றிய செயலாளர் மிதுன் சக்கரவர்த்தி, ராமநாதன், பாலசுப்பிரமணியன், சீனிவாச பெருமாள், முருகேசன், பொன்னுசாமி, தங்கமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post 1072 ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.

Related Stories: