தொழிலாளி மர்ம சாவு

மேட்டூர், ஏப்.10: ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள கன்னப்பள்ளியை சேர்ந்தவர் இருசாகவுண்டர் மகன் மாயவன் (48), கூலித் தொழிலாளி. கடந்த 3 ஆண்டுகளாக, வேலைக்கு செல்லாமல் மதுவிற்கு அடிமையானார். நேற்று காலை கொளத்தூர் அடுத்த குருவரெட்டியூர் அருகே, பாலமலை காப்புக்காட்டில் சடலமாக கிடந்தார். தகவலறிந்த கொளத்தூர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று அவரது சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் அளவுக்கதிகமாக மது அருந்தியதால் உயிரிழந்தாரா? அல்லது யாரேனும் கொலை செய்து வனப்பகுதியில் சடலத்தை வீசி சென்றனரா என்ற கோணத்தில், கொளத்தூர் எஸ்ஐ மணிமாறன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post தொழிலாளி மர்ம சாவு appeared first on Dinakaran.

Related Stories: