விவசாயிகளுக்கு ஆடு வளர்ப்பு பயிற்சி

மல்லூர், ஏப்.18: பனமரத்துப்பட்டி ஒன்றியம், களரம்பட்டி கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் லாபகரமான வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடு வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. அட்மா திட்ட தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்து பேசினார். பனமரத்துப்பட்டி வட்டார வேளாண்மை துறை உதவி இயக்குனர் சாகுல் அமீத் முன்னிலை வகித்து, வேளாண்மை துறையில் பல்வேறு திட்டங்கள், மானியங்கள் பற்றியும், பயன்பெற விவசாயிகள் தங்களுடைய நில உடமை பதிவுசெய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். கால்நடை உதவி மருத்துவர் சுதாகர், விவசாயிகள் தங்களுடைய ஆடுகளை கோடை காலத்தில் எவ்வாறு பராமரிப்பது, அடர் தீவனம் மற்றும் உலர் தீவனம் தொழில் நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து, ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் மற்றும் உன்னி நீக்குதல் செயல் விளக்கம் செய்து காண்பித்தார். இப்பயிற்சியில் பிஜிபி வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் கலந்து கொண்டு, மண்புழு உரம் உற்பத்தி. உழவன் செயலி, தேனீ வளர்ப்பு விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பதாகை கொண்டு பயிற்சி அளித்தனர். முகாம் ஏற்பாடுகளை, அட்மா திட்ட அலுவலர்கள், வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுமித்ரா, உதவி தொழில்நுட்ப மேலாளர் ரேணுகா ஆகியோர் செய்திருந்தனர்.

The post விவசாயிகளுக்கு ஆடு வளர்ப்பு பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: