ஜலகண்டாபுரம், ஏப்.17: ஜலகண்டாபுரம் அரசு மகளிர் பள்ளி மேல்நிலைப்பள்ளி மாணவிகள், தேசிய திறனறி தேர்வில், தொடர்ந்து 7வது ஆண்டாக மாவட்ட அளவில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
ஜலகண்டாபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர். 2024-25ம் கல்வி ஆண்டில், 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தேர்வு, கடந்த பிப்ரவரி 22ல் நடந்தது. இதில் சேலம் மாவட்டத்தில் இருந்து சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வெழுதினர். தேர்வு முடிவுகள், கடந்த 12ம் தேதி வெளியானது. இதில், ஜலகண்டாபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 17பேர் தேர்ச்சி பெற்று, தொடர்ந்து 7வது ஆண்டாக, மாவட்ட அளவில் ஒரே பள்ளியில் இருந்து அதிக மாணவிகள் தேர்ச்சி என்ற சாதனையை படைத்துள்ளனர். கடந்த 7 ஆண்டுகளில் இப்பள்ளியில் 130 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மாணவிகள் மற்றும் பயிற்சி ஆசிரியர் அருண் கார்த்திகேயன் ஆகியோருக்கு, பள்ளியின் தலைமை ஆசிரியை கலா, உதவி தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன், பெற்றோர் ஆசிரிய கழக தலைவர் சண்முகசுந்தரம், துணைத்தலைவர் சுரேஷ் மற்றும் உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர் தனலட்சுமி மற்றும் உறுப்பினர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் வாழ்த்து தெரிவித்தனர்.
The post ஜலகண்டாபுரம் அரசு பள்ளி மாணவிகள் தேர்ச்சி appeared first on Dinakaran.