இதற்கான ஏற்பு கடிதத்தை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக் டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர். விகாஸ் குமாரிடம் இன்று (02.04.2025) வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிதி இயக்குநர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர். அமித் குமார் ஜெயின் (இயக்கம் மற்றும் சேவைகள்), சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.
ஒப்பந்தத்தின் கீழ் உள்ள பணியின் நோக்கம், இரண்டாம் கட்டத்தில் உள்ள 3 வழித்தடங்கள், மூன்று பராமரிப்பு பணிமனைகள் மற்றும் பயணிகளுக்கு சேவைகளை வழங்குதல் உட்பட இயக்கம் மற்றும் பராமரிப்பு தொடர்பான அனைத்து பணிகளும் இதில் அடங்கும். இதற்கான ஒப்பந்த காலம், இரண்டாம் கட்டத்தில் பயணிகளின் சேவை தொடங்கும் தேதியிலிருந்து பன்னிரண்டு ஆண்டுகள் வரை செயல்பாட்டில் இருக்கும். டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பணிகள் திருப்திகரமாக இருப்பின் மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டிக்கப்படலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சென்னையில் 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: 118.9 கி.மீ தூரத்தை இயக்கி, பராமரிக்க ஒப்பந்தம் appeared first on Dinakaran.