திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை மே 9ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறக்கிறார்

திருச்சி: திருச்சி மாநகராட்சி பஞ்சப்பூரில் ரூ.900 கோடியில் 40 ஏக்கர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் மிக பிரமாண்டமாக ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து முனையத்தோடு, கனரக சரக்கு வாகன முனையம், ஆம்னி பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் முடிவடையும் நிலையில் உள்ளது.

இந்நிலையில் நேற்று பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனைய கட்டுமானப்பணிகளை பார்வையிட்டு அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திருச்சியில் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் வரும் மே 9ம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக வந்து திறந்து வைக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை மே 9ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறக்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: