சிறப்பு அழைப்பாளர்களாக தொழிலதிபர்கள் ஜெய்னுலாப்தீன், உமாபதி, செல்வராஜ், வேலாயுதம், பத்ரிநாத் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றினர். மாநில தலைமைச் செயலாளர் ராஜ்குமார், காஞ்சிபுரம் மண்டல தலைவர் அமல்ராஜ், மாநில கூடுதல் செயலாளர்கள் மணி, ராஜசேகரன், செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன், செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் பிரபாகரன், வடக்கு மாவட்ட தலைவர் இந்திரஜித், மாநில துணைத்தலைவர் அப்துல் சமத், மாநிலத் துணைத் தலைவர்கள் பிரபாகரன், ராஜசேகர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார்.
தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைக்கப்பட்ட 100 அடி கொடி கம்பத்தில் சங்க கொடியை விக்கிரமராஜா ஏற்றி, மாநாடு பந்தல் அமைப்பதற்கு கால்கோள் ஊன்றினார்.அவர் பேசியதாவது: வரும் மே 5ம் தேதி மதுராந்தகத்தில் 42வது வணிகர் தினம், வணிகர் அதிகார பிரகடன மாநாடாக நடைபெற உள்ளது.
முதல்வர் இதற்கு முன்பு நடந்த மாநில மாநாட்டில் கலந்துகொண்டு வணிகர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றினார். வியாபாரிகளை அச்சுறுத்தும் ஆன்லைன் வர்த்தகம் மற்றும் கார்ப்பரேட் கம்பெனி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. தமிழக முதல்வரும், பாரத பிரதமரும் கட்டாயமாக வணிகர்களை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
The post ஆன்லைன் வர்த்தகத்திற்கு எதிராக வணிகர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படும்: விக்கிரமராஜா பேச்சு appeared first on Dinakaran.