சேலம், மார்ச் 19: சேலம் ஜாரிகொண்டலாம்பட்டி அரசு பள்ளி அருகில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக கொண்டலாம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் நேற்று முன்தினம், எஸ்ஐ ஆனந்த் தலைமையிலான போலீசார், அப்பகுதிக்கு சென்று சோதனையிட்டனர். அதில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த வாலிபரை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர், நெய்காரப்பட்டி சந்தைபேட்டை மேட்டுத்தெருவை சேர்ந்த தியாகராஜன் (25) எனத்தெரியவந்தது. அவர் சிறியபொட்டலங்களில் வைத்திருந்த ₹1000 மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர், கைதான தியாகராஜனை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனர்.
The post கஞ்சா விற்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.