சேலம், மார்ச் 24: வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஸ் (35). இவரது மனைவி மோனிகா (30). இவர்கள் இருவரும், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சென்று விட்டு, தங்களது காரில் சேலம் வழியாக, வாணியம்பாடிக்கு சென்று கொண்டிருந்தனர். நேற்று இரவு சேலம் ஏவிஆர் ரவுண்டானா அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக போக்குவரத்து சிக்னல் கம்பம் ஹரிஸ் ஓட்டி வந்த கார் மீது உடைந்து விழுந்தது. அதிர்ஷ்ட வசமாக காரில் பயணித்த ஹரிஸ், அவரது மனைவி மோனிகாவுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. போக்குவரத்து சிக்னல் கம்பம் உடைந்து விழுந்ததில் காரின் முன்பக்க பகுதி மட்டும் சேதமாகியது. இதுகுறித்து தகவல் சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடைந்து விழுந்த சிக்னல் கம்பத்தை அகற்றினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
The post சிக்னல் கம்பம் உடைந்து விழுந்ததில் கார் சேதம் appeared first on Dinakaran.