ஓமலூர், மார்ச் 21: ஓமலூர் வட்டாரத்தில் பள்ளிகள் அருகே உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் பணியாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
ஓமலூர் வட்டாரத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகளில் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க பெட்டிக்கடைகள் தொடங்கி அனைத்து கடைகளிலும் நேரில் கன ஆய்வு மேற்கொண்டனர். ஓமலூர் வட்டார உணவு பாதுகாப்புத்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சி துறை மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் இணைந்த கூட்டு குழுவினர் இந்த தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவர்கள் பள்ளி, கல்லூரி, கல்வி நிறுவன பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு செய்து போதை பொருட்கள் விற்பனையை தடுத்து வருகின்றனர். தொடர்ந்து மாவட்டம் முழுவதுமாக போதை பொருட்கள் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அரசு, தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் உடல்நிலை, உளவியல் சார்ந்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
The post ஓமலூர் வட்டாரத்தில் பள்ளிகள் அருகே உள்ள கடைகளில் அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.