சேத்துப்பட்டு, பெரணமல்லூரில் போதை பொருள் விற்ற 5 கடைகளுக்கு சீல்

சேத்துப்பட்டு, மார்ச் 21: சேத்துப்பட்டு, பெரணமல்லூரில் போதை பொருள் விற்ற 5 கடைகளுக்கு போலீசார் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஆரணி சாலை, வந்தவாசி சாலை, செஞ்சி சாலை, கெங்காபுரம் பகுதிகளில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா ஆகியவை விற்பனை செய்யப்படுவதாக வடக்கு மண்டல ஐஜிக்கு ரகசிய தகவல் வந்தது.

அதன்பேரில் சிறப்பு தனிப்படை போலீசார் மாறுவேடத்தில் வந்து சதாசிவம், தினேஷ், நசீர் முகமது ஆகியோரிடம் தடை செய்யப்பட்ட பொருட்களை வாங்கியபோது கையும் களவுமாக பிடிக்கப்பட்டு அவர்களை சேத்துப்பட்டு போலீசில் ஒப்படைக்கப்பட்டு சிறையில் அடைத்தனர். அதனை தொடர்ந்து நேற்று திருவண்ணாமலை உணவு பாதுகாப்பு துறை அலுவலர் விஜயகுமார் நேற்று சேத்துப்பட்டு கெங்காபுரம், பெரணமல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பெரிய கொழப்பலூரில் போதை பொருள் விற்ற ஒரு கடை என ஆகிய ஐந்து கடைகளுக்கு சீல் வைத்தார். மறு அறிவிப்பு வரும் வரை கடையை திறக்க கூடாது திறந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

The post சேத்துப்பட்டு, பெரணமல்லூரில் போதை பொருள் விற்ற 5 கடைகளுக்கு சீல் appeared first on Dinakaran.

Related Stories: