செங்கம், மார்ச் 13: ஒரே நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்ததால் 3 லாரிகள் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மேலும் லாரியை பின் தொடர்ந்து வந்த காரும் தேங்கிய மழைநீரில் மூழ்கியது. திருவண்ணாமலையில் இருந்து செங்கம் வழியாக கிருஷ்ணகிரி நோக்கி சிமெண்ட் கூழ் ஏற்றிக்கொண்டு லாரி நேற்று காலை சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து செங்கம் அடுத்த தண்டம்பட்டு கிராமத்தில் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதேசமயம் எதிர் திசையில் கிருஷ்ணகிரியில் இருந்து செங்கம் நோக்கி பைப்புகள் ஏற்றி வந்த லாரி எதிரே விபத்து ஏற்படாமல் தடுக்க ஓட்டுநர் வாகனத்தை கட்டுப்படுத்தியபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் தேங்கிய மழைநீரில் மூழ்கியது.
இதற்கிடையே சிமெண்ட் கூழ் ஏற்றி வந்த லாரியை பின் தொடர்ந்து சலவை சோப்பு ஏற்றி வந்த சரக்கு லாரியும் விபத்தில் சிக்கியது. லாரி மீது மோதி சாலையோரம் கவிழ்ந்தது, சிமெண்ட் கூல் ஏற்றி வந்த லாரி மீது மோதாமல் இருக்க பைப்புகள் ஏற்றி வந்த லாரி விபத்துக்குள்ளாகும் போது பின் தொடர்ந்து வந்த கார் சாலையோரம் நீரில் பாய்ந்து மூழ்கியது. ஒரே நேரத்தில் நான்கு வாகனங்களும் ஒரே இடத்தில் விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக வாகன ஓட்டிகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேல் செங்கம் போலீசார் வாகனங்களை மீட்டு போக்குவரத்தை முறைப்படுத்தினர்.
The post 3 லாரிகளும் சாலையோரம் கவிழ்ந்து விபத்து: ஒரே நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.