ஆரணி, மார்ச் 18: ஆரணி ஆர்டிஓ அலுவலகத்தில் மக்கள் அளித்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. ஆரணி ஆர்டிஓ அலுவலகத்தில் வாரந்திர மக்கள் குறைத்தீர்வு கூட்டம் வருவாய் கோட்டாசியர் அலுவலக கண்காணிப்பாளர் தரணிகுமரன் தலைமையில் நேற்று நடந்தது. இதில், தலைமையிடத்து துணை தாசில்தார் தட்சணாமூர்த்தி, மண்டல துணை தாசில்தார் தேவி மற்றும் பிறதுறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, வருவாய் கோட்டாசியர் அலுவலக கண்காணிப்பாளர் தரணிகுமரன் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று விசாரணை நடத்தினர்.
அப்போது, ஆரணி அடுத்த அப்பந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த சையத்சார்ஜகான் அளித்த மனுவில், ‘எனது வீட்டிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜேஜேஎம் திட்டத்தில் குடிநீர் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. ஆனால், இதுநாள் வரை குடிநீர் வரவில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தார். முன்னதாக, சையத்சார்ஜகான் தனது குடும்பத்துடன் காலி குடங்களுடன் ஆர்டிஓ அலுவலகம் முன்பு நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, மனு அளித்தனர். இதேபோல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 86 கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது. அவை துறை சார்ந்த அலுவலர்களிடம் வழங்கி, உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
The post மக்கள் அளித்த 86 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை அதிகாரிகளுக்கு உத்தரவு ஆரணி ஆர்டிஓ அலுவலகத்தில் appeared first on Dinakaran.