மார்பில் குண்டு பாய்ந்து ராணுவ வீரர் வீரமரணம் காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட சண்டையில்

செய்யாறு, மார்ச் 20: காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் சண்டையில் மார்பில் குண்டு பாய்ந்து செய்யாறு அருகே வெம்பாக்கத்தை சேர்ந்தவர் ராணுவ வீரரான வினோத்குமார் நேற்று வீரமரணம் அடைந்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் குளத்து தெருவை சேர்ந்தவர் ஜீவகன் ஓய்வு பெற்ற போலீஸ், இவரது மகன் வினோத்குமார்(49) காஷ்மீர் பகுதியில் 62வது படைத்தளத்தில் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 18ம் தேதி மாலை 3.49 மணியளவில் காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட சண்டையில் வலது தோள்பட்டையில் குண்டு பாய்ந்தது. அங்குள்ள (எஸ்கேஐஎம்எஸ்) மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று 19ம் தேதி வீரமரணம் அடைந்தார். இவரது உடல் இன்று சொந்த ஊரான வெம்பாக்கத்திற்கு கொண்டுவரப்படுகிறது. தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட சண்டையில் வீரமரணம் அடைந்த வினோத் குமாருக்கு கிராம மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வீரமரணம் அடைந்ததை கேட்டு கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. வீர மரணம் அடைந்த வினோத்குமாருக்கு மனைவி நர்மதா(45), ரஷிதா(18), கீர்த்தனா(15) ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.

The post மார்பில் குண்டு பாய்ந்து ராணுவ வீரர் வீரமரணம் காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட சண்டையில் appeared first on Dinakaran.

Related Stories: