தண்டராம்பட்டு, மார்ச் 20: தண்டராம்பட்டு அருகே பாலமுருகன் கோயிலில் ஐம்பொன் சுவாமி சிலைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட ரிஜிஸ்டர் ஆபீஸ் அருகே பாலமுருகன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் 150 கிலோ கொண்ட ஒன்னறை அடி மூன்று ஐம்பொன் சிலைகள் உள்ளது. இந்த சிலைகளுக்கு செவ்வாய்க்கிழமை தோறும் அபிஷேகம், ஆராதனை செய்து பொதுமக்கள் வழிபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பூசாரி நேரு கோயிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று காலை வழக்கம்போல் கோயிலில் சென்று பார்த்தபோது பூட்டை உடைத்து ஐம்பொன்னால் ஆன முருகன் வள்ளி தெய்வானை சிலைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளது பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பூசாரி நேரு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் எஸ்ஐ குமரேசன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
The post ஐம்பொன் சுவாமி சிலைகள் திருட்டு போலீசார் விசாரணை தண்டராம்பட்டு அருகே பாலமுருகன் கோயிலில் appeared first on Dinakaran.