முன்னாள் படை வீரர்களுக்கு மார்ச் 26ல் சிறப்பு குறைதீர்

திண்டுக்கல், மார்ச் 21: திண்டுக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர்கள், சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர்களை சார்ந்தோர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் மார்ச் 26ம் தேதி நடைபெறவுள்ளது என கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள், சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர்களை சார்ந்தோர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் மார்ச் 26ம் தேதி காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. கூட்டத்திற்கு வருகை தரும் முன்னாள் படைவீரர்கள், சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர்களை சார்ந்தோர்கள் தங்களது கோரிக்கை மனுவின் இரட்டை பிரதிகளுடன் மார்ச் 26ம் தேதி காலை 9 மணி முதல் 10 மணிக்குள் கலெக்டர் அலுவலகத்தில் ஆஜராகி பயன்பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post முன்னாள் படை வீரர்களுக்கு மார்ச் 26ல் சிறப்பு குறைதீர் appeared first on Dinakaran.

Related Stories: