வாடிப்பட்டி, மார்ச் 21: வாடிப்பட்டியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது. ஆனால் சார்பு நீதிமன்றம் மதுரையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இதனால் வாடிப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களை சேர்ந்த பொதுமக்கள் சார்பு நீதிமன்றத்திற்காக மதுரைக்கு சென்று வரும் சூழல் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் காலம் மற்றும் பண விரையத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, வாடிப்பட்டியில் சார்பு நீதிமன்றம் அமைக்க கோரி வழக்கறிஞர் சங்கம் சார்பாக பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தங்களது கோரிக்கையை வலியுறுத்தி வாடிப்பட்டி நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் நேற்று மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். சார்பு நீதிமன்றம் அமைப்பது குறித்த தங்களின் கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்ட திரளான வழக்கறிஞர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
The post வாடிப்பட்டியில் சார்பு நீதிமன்றம் அமைக்கக்கோரி வழக்கறிஞர்கள் மனித சங்கிலி appeared first on Dinakaran.