சுவாதி நட்சத்திரங்கள்; பலன்கள்; பரிகாரங்கள்…

கால புருஷனுக்கு பதினைந்தாவதாக (15) வரக்கூடிய நட்சத்திரம் சுவாதி நட்சத்திரமாகும். சுவாதி என்பது ராகுவின் நட்சத்திரமாக இருப்பதால் பிரமாண்டத்திற்கு குறைவில்லை. சுவாதி நட்சத்திரத்தன்று கடலின் அடிப்பகுதியில் இருந்து வரும் சிப்பிகள் தங்களை சிப்பிகளைத் திறந்த காத்து நிற்குமாம். அவ்வாறு திறந்திருக்கும் பொழுது சிப்பிக்குள் வானில் இருந்து வரும் மழைத்துளியானது விழும் பொழுது உள்வாங்கிக் கொண்டு சிப்பிகள் மூடிக் கொண்டு கடலுக்கடியில் சென்று அந்த மழைத் துளியினை முத்தாக உருவாக்குகிறது இயற்கை. சுவாதியின் நட்சத்திரத்தின் மிகச் சிறப்பாகும்.
சுவாதி நட்சத்திரத்தின் வேறு பெயர்கள் மரக்கால், பதுமம், தீபம் ஆகியவை ஆகும்.
சுவாதி – விருட்சம் : மருதம்
சுவாதி – யோனி : ஆண் எருமை
சுவாதி – பட்சி : காகம்
சுவாதி – மலர் : மஞ்சள் நிற
அரளி
சுவாதி – சின்னம் : தேன்கூடு
மற்றும்
புல்லின் நுனி
மற்றும் காற்றில்
அசையும்
தீபச்சுடர்
சுவாதி – அதிபதி : ராகு
சுவாதி – அதி தேவதை : நரசிம்மர்
சுவாதி – கணம் : தேவ கணம்
சுவாதி என்பது துலாம் ராசியில் உள்ள ஒரு முழு நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரம் சுக்ரனின் வீட்டில் இருப்பதால் அழகான பிரமாண்டம் எனச் சொல்லலாம்.

சுவாதியின் சிறப்புகள்

‘‘அகில உலகத்திற்கு நானே அரசன் ஆகவே, என்ைன மட்டுமே நீ வாழ்த்த வேண்டும்’’ என்று சொன்னான் ஹிரண்ய கசிபு. இதை காதில் வாங்கிக் கொள்ளாமல் நாரயணன் மந்திரத்தையே உச்சரித்து கொண்டிருந்தான் பிரகலாதன். தன் மகன் என்றும் பாராமல் பல சோதனைகளும் வேதனைகளும் நடந்தன. இறுதியாக சுவாதி நட்சத்திரத்தின் பிரதோஷ வேளையில்தான் பிரகலாதனின் குரல் கேட்டு அவதரித்தார் நரசிம்ம மூர்த்தி. மேலும், இந்த சுவாதி நட்சத்திரத்தில்தான் யோகிராம் சுரத்குமார்
அவதரித்தார். ஜோதிட சாஸ்திரத்தில் ஒளி கிரகமான சூரியன் காலபுருஷனுக்கு ஏழாம் இடமான துலாத்தில் சுவாதிக்குள் பிரவேசிக்கும் பொழுது தனது சக்தியை குறைத்து மாகாளியுடன் சரணடைகிறது என்பது இயற்கையின் சிறப்பாகும். அதேபோல் இந்த ராசிக்குள் சனிபகவான் நுழையும் பொழுதுதான் பலம் பெறுகிறது. ஆம், போன ஜென்ம சேர்த்து வைத்த கர்மங்களை சுவாதி நட்சத்திரமான ராகுவிடம் இருந்து சனி பகவான் பெற்றுக் கொள்கிறார். ஒவ்வொரு தனிமனிதனின் கர்மங்களை சேகரிக்கும் இடமாக துலாம்
ராசியில் உள்ள சுவாதி உள்ளது. அவ்வாறு பெறப்பட்ட கர்மங்களுக்கு ஏற்ப சனி பகவான் மறுபடியும் அந்தந்த பாவகங்களில் செல்லும் போது கர்மங்களுக்கு ஏற்ற பலன்களை வழங்குகிறார் என்பது சனி பகவான் சுவாதியிலிருந்து வெளியேறும் பொழுது ஏற்படும் மாற்றம்.சுவாதியின் அதிதேவதைகளில் ஒருவரில் வாயு பகவானும் ஆவார். ஆகவே, காற்றில் மூலம் நெருப்பை பெரிதாக்குவார். மேலும், சுவாதிக்கு தூய்மை என்ற பொருளும் உண்டு. நெருப்பில் தோஷம் இருக்காது மிகவும் தூய்மையானது.
சுவாதி நட்சத்திரம் என்பது 27 நட்சத்திரங்களில் தோஷம் இல்லாத நட்சத்திரமாகச் சொல்லப்படுகிறது.
சுவாதி நட்சத்திரத்தில் சந்திரன் – சுக்ரன் இணையும் காலத்தில் பலத்த புயல் மழை உண்டாகும் காலமாக அமைவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. காரணம் இந்த சுவாதியானது வாயு தத்துவத்தை அடிப்படையாக கொண்ட ஒரு நட்சத்திரம்.தேனீக்கள் சுவாதியின் அடையாளமாக கருதப்படுகிறது. ஆகவே, கூட்டமாக உள்ள இடத்தை விரும்புவார்கள்.

பொதுப்பலன்கள்

இந்த நட்சத்திரக்காரர்கள் உழைப்பாளிகள். உங்களுக்கென்று எதையும் சேர்த்து வைத்துக் கொள்ள மாட்டீர்கள். ஆகவே, உங்களை நீங்களே கவனித்துக் கொள்வது நலம் பயக்கும். சமூகத்தில் நீங்கள் தனித்து தெரிய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதனால், உங்களுக்கு திருஷ்டி உண்டாகும் வாய்ப்புகள் அதிகம். பெண்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது நலம் பயக்கும்.

வேலை தேடுபவர்களுக்கு…

வேலை தேடுபவர்கள் சுவாதி நட்சத்திரத்தன்று சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து உத்யோகப் பிராப்தி என பிரார்த்தனை வைத்தால் நிச்சயம் வேலை கிடைக்கும்.

சுவாதிக்குரிய வேதை நட்சத்திரம்்..

வேதை என்பது தொந்தரவுகளையும் மனஸ்தாபங்களையும் ஏற்படுத்தக் கூடிய நட்சத்திரமாகும். ரோகிணி நட்சத்திரத்தன்று புதுக்காரியங்களை தொடங்குவதோ அல்லது புது நபர்களை சந்திரப்பதை தவிர்ப்பது நன்மை தரும்.

ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நன்மை பயக்கும். நீங்கள் சுதந்திரமாக நாம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள். ஆகவே, உணவுக் கட்டுப்பாடு, மனக்கட்டுப்பாடு இருந்தால்தான் ஆரோக்கியம் மேம்படும். சிறுநீர் நோய்கள், தோல் நோய்கள், சர்க்கரை நோய்கள்
ஏற்படும் வாய்ப்புகள் உண்டாகும். ஆகவே, கவனம் தேவை.

பரிகாரம்

* மருதமரங்கள் சூழ்ந்த இடத்தில் உள்ள காளியையோ அல்லது நரசிம்மரை வழிபடுவது சிறப்பானதாகும்.
* சுவாதி நட்சத்திரம் வரும் நாளில் நீங்கள் நரசிம்மருக்கு பானகம் நெய்வேத்யம் செய்து கோயிலில் வரும் பக்தர்களுக்கு தானம் செய்யுங்கள். உங்கள் வாழ்வு மேம்படும், தொழில் சிறப்பாக அமையும்.
* மருத மரக் கன்றுகளை வாங்கி சுவாதி நட்சத்திரத்தன்று வனப் பகுதியிலோ அல்லது பாதுகாப்பாக நட்டு வையுங்கள் உங்களுக்கான தோஷங்கள் விலகும்.

கலாவதி

 

The post சுவாதி நட்சத்திரங்கள்; பலன்கள்; பரிகாரங்கள்… appeared first on Dinakaran.

Related Stories: