முதல்வருக்கு அமைச்சர், எம்எல்ஏ நேரில் நன்றி

ஓசூர், மார்ச் 18: ஓசூருக்கு மூன்று திட்டங்களை வழங்கிய தமிழக முதல்வருக்கு, அமைச்சர் சக்கரபாணி, பிரகாஷ் எம்எல்ஏ நேரில் நன்றி தெரிவித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் உயர்தர அலுவலக வசதிகளுடன் ரூ.400 கோடி மதிப்பீட்டில், டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என 2025-2026 நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.

அதேபோல், ஓசூர் மாநகரத்தை ஒட்டி உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகளுடன், ஓசூர் அறிவுசார் பெருவழித்தடம், தளி அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்துவது போன்ற திட்டங்களும் அறிவிக்கப்பட்டது. இந்த முத்தான 3 திட்டங்களை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.

The post முதல்வருக்கு அமைச்சர், எம்எல்ஏ நேரில் நன்றி appeared first on Dinakaran.

Related Stories: