இடி தாக்கி 20 ஆடுகள், நாட்டு மாடு பலி

 

தேன்கனிக்கோட்டை, மார்ச் 24: அஞ்செட்டி அருகே என்.புதூர் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு இடி தாக்கியதில் 20 ஆடுகள், ஒரு நாட்டு மாடு பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்யும் அறிகுறியுடன் இடி மின்னல் தாக்கியது. ஆனால், மழை பெய்யவில்லை. இந்நிலையில், அஞ்செட்டி அருகே நாட்ராம்பாளையம் பஞ்சாயத்து என்.புதூர் கிராமத்தில் கோவிந்தம்மாள்(50) என்பவருக்கு சொந்தமான கொட்டகை மீது இடி இறங்கியது. இதில், கொட்டகையின் மேற்கூரை சேதமடைந்தது. மேலும், அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த நாட்டு மாடு உடல் கருகி உயிரிழந்தது. மேலும், அதே கொட்டகையில் பட்டி போட்டிருந்த பழனியம்மான்(45) என்பவருக்கு சொந்தமான 20 ஆடுகளும் பலியாகின.

The post இடி தாக்கி 20 ஆடுகள், நாட்டு மாடு பலி appeared first on Dinakaran.

Related Stories: