அரசு பள்ளி ஆண்டு விழா

 

போச்சம்பள்ளி, மார்ச் 24: அரசம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்வி அலுவலர் சரவணன் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் சபீக்ஜான் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் செந்தில்குமார் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இதில், 8 குழந்தைகள் புதியதாக பள்ளியில் சேர்ந்தனர். தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மேலும், மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. அரசம்பட்டி உதவும் கரங்கள் அமைப்பின் சார்பில் ₹2 ஆயிரம் செலுத்தி புரவலராக இணைத்து கொண்டனர்.  நிகழ்ச்சியில் உதவி ஆரியர் பிரபாகரன், ஆசிரியர் பயிற்றுனர்கள் கோவிந்தராஜ், காவேரி, நவந்தன், எஸ்எம்சி தலைவர் அம்சவேணி, துணைத்தலைவர் திரிவேணி, முன்னாள் தலைவர் சம்பத், பிரபு, சேகர், ஜெகதீசன், இளவரசன், மணிகண்டன், ரமேஷ், கண்ணன் மற்றும் பெற்றோர், கிராம மக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஆசிரியர் சரண்யா, கல்பனா ஆகியோர் செய்திருந்தனர்.

The post அரசு பள்ளி ஆண்டு விழா appeared first on Dinakaran.

Related Stories: