ராயக்கோட்டை, மார்ச் 25: ராயக்கோட்டையில், சொட்டு நீர் பாசனத்தில் சுரைக்காய் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பூக்கள் சாகுபடிக்கு அடுத்து, காய்கறிகள் சாகுபடி பிரதானமாக உள்ளது. தற்போது, சின்னதப்பை, குளிக்காடு, ஒடையாண்டஅள்ளி, தொட்டதிம்மனஅள்ளி, நெல்லூர், தின்னூர் ஆகிய கிராமங்களில், சுரைக்காய் சாகுபடியில் விவசாயிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இங்கு விளையும் சுரைக்காயை, ராயக்கோட்டை மார்க்கெட்டிற்கு கொண்டு வருகின்றனர். இங்கிருந்து சென்னை மற்றும் மதுரை வியாபாரிகள், மொத்த கொள்முதல் விலையாக கிலோ ₹10 வரை வாங்கிச்செல்கின்றனர். உள்ளூர் வியாபாரிகள் கிலோ ₹15க்கு விற்பனை செய்கின்றனர்.
The post சுரைக்காய் சாகுபடி பரப்பு அதிகரிப்பு appeared first on Dinakaran.