15வயது சிறுமி கடத்தல் வாலிபர் மீது புகார்

கிருஷ்ணகிரி, மார்ச் 21: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் குண்டலப்பட்டி பகுதியை சேர்ந்த 15வயது சிறுமி வீட்டில் இருந்து வந்தார். கடந்த 16ம் தேதி மதியம் 2 மணியளவில், வீட்டில் இருந்த சிறுமி திடீரென மாயமானார். அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. இதுகுறித்து நேற்று, சிறுமியின் தாய் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதில், அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ்(30) என்பவர் ஆசை வார்த்தை கூறி, தனது மகளை கடத்தி சென்றிருக்கலாம் என சந்தேகம் இருப்பதாகவும், அவரிடமிருந்து மகளை மீட்டு தரவேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post 15வயது சிறுமி கடத்தல் வாலிபர் மீது புகார் appeared first on Dinakaran.

Related Stories: